Tuesday, June 29, 2010

காதலை மறுக்க மனம் தெளிவாக வேண்டும்


ஒருவர் தம்மிடம் வந்து தனது காதலை உரைக்கும் போது அதனை மறுக்க நமது மனம் தெளிவாக இருக்க வேண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.




என்ன காரணத்திற்காக காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.



ஆனால் ஒரே ஒரு காரணத்திற்காகவே காதலை ஏற்கவில்லை என சொல்வதில் ஆபத்து உண்டு. அந்த காரணத்தை நிவர்த்தி செய்து கொண்டு வந்து மீண்டும் காதலிக்கச் சொல்லலாம்.



எந்த காரணம் என்றேத் தெரியாது... ஒருவர் மீது நமக்கு காதல் வராது. வரவும் வாய்ப்பில்லை என்று தெரியும். அப்படிப்பட்டவர் நம்மிடம் வந்து காதலைச் சொன்னால் என்ன காரணம் என்று கேட்டால் குழம்பி விடக் கூடாது.









நாகரீகமாக அவரது காதலை மறுத்துவிடுங்கள். உங்கள் மீது காதல் வராது என்பதை தெளிவாக சொல்லிவிடுங்கள். ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி காதலை மறுத்தால், உங்கள் காரணத்தை உடனடியாக மாற்றிக் கொண்டு வந்து உங்கள் முன் நிற்கலாம்.



அது உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். எனவே, காதலை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு என்பதையும், இதுவரை அவர் மீது எந்தவொரு ஈர்ப்பு வரவில்லை என்பதையும் தெளிவாக சொல்லிவிடுங்கள்.



நீங்கள் என்ன சொன்னாலும், உடனே அவர் விலகுவார் என்று எதிர்பார்க்க முடியாது.



பல முறை கேட்டால் ஒரு முறையாவது நீங்கள் மனம் மாற மாட்டீர்களா என்றுதான் யோசிப்பார்கள். எனவே அவரை சந்திப்பதோ, பார்ப்பதையோ முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.



அவராக பேச வந்தால், என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விலகி விடுங்கள்.



நாம் நட்பாக பழகலாம் என்று இறங்கி வருவார். அப்போது, கொஞ்சம் புத்திசாலித்தனமாக பேச வேண்டி வரும்.



நான் நட்பு ரீதியில்தான் உங்களிடம் பழகினேன். எனக்கு சொந்தத்திலேயே நிச்சயம் செய்திருக்கிறார்கள். வேலை நிமித்தமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது போன்று ஒரு பொய்யைக் கூறலாம் தேவைப்பட்டால்.



உங்கள் மீது காதல் இல்லை, வரவும் வராது என்பதை மட்டும் எப்போதும் ஞாபகப்படுத்துங்கள்.








ஒருவர் உங்களை காதலிப்பதாகக் கூறியக் காரணத்திற்காகவே நீங்கள் அவரைக் காதலிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. அது ஒரு உணர்வு. தானாக வர வேண்டுமேத் தவிர கட்டாயத்தின் பேரில் வரக் கூடாது.



அவர்களது வற்புறுத்தலாலோ, கட்டாயத்தின் பேரிலோ, வேறு வழியில்லாமலோ காதல் வரக் கூடாது என்பதை நீங்கள் முதலில் நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Invited comments from all visitors