Friday, May 18, 2012

வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள்: ரஷ்ய விஞ்ஞானி கருத்து

மாஸ்-
சூரிய குடும்பத்தில் பூமியை ஒத்த மற்றொரு கிரகம் வீனஸ் என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் வெள்ளி ஆகும். இதன் விட்டம் 7,521 மைல்கள். பூமியின் விட்டமோ 7,926 மைல்கள் ஆகும். எனினும் இதன் மேற்பரப்பில் 97 சதவீதம் கார்பன்&டை&ஆக்சைடு வாயுவே நிரம்பியுள்ளது. சூரியனிலிருந்து 67.2 மில்லியன் மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இதன் வெப்பநிலை 480 டிகிரி செல்சியஸ் ஆகும். இத்தகைய தன்மை வாய்ந்த இந்த கிரகத்தில் உயிரினங்களின் வாழ்வு குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 1982ம் ஆண்டு அனுப்பப்பட் வீனஸ்&13 எடுத்த புகைப்படங்களை ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் லியோனிட் சான்பாமலிட்டி என்பவர் மறு ஆய்வு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் தேள் ஒன்றின் உடலமைப்பை கொண்ட உருவமும், தட்டு ஒன்றும் நகர்வது போன்ற காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருப்பது ஆராய்ச்சியாளர்களிடையே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் கண்டங்கள் அனைத்து இணைந்து புதிய அமேசியா கண்டம் உருவாகும் விஞ்ஞானிகள் தகவல்

உலகில் உள்ள கண்டங்கள் அனைத்து இணைந்து அமேசியா என்ற புதிய பெரிய கண்டம் உருவாகும் என புவி யியல் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் வடக்கு அப்குதி நீர் மற்றும் காற்றுப்போக்கி னால் இணையும். இதனுடன், ஆர்டிக் கடலும், கரீபியன் கடலும் ஒன்றாக சேரும். இதன் மூலம் மிகப்பெரிய புதிய கண்டம் உருவாகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பூமியின் அடியில் உள்ள பிளேட்டுகள் தற்போது நகர்ந்த வண்ணம் உள்ளன. இதனால் ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டங்களின் வடக்கு முனை பூமி பிளேட்டு கள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கும் அபாயம் உள் ளன. அதுபோன்ற மாற்றங்களி னால் ஆஸ்திரேலியா கண்டம் இந்தியாவுடன் இணைய லாம். என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியிட்டு உள்ளார்.

கடற்கரையை நம்பி வாழும் பறவையினங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது: ஆய்வு அறிக்கை தகவல்

தரையில் இனப்பெருக்கம் செய்து, கடலுக்குச் சென்று உணவுதேடும் ஆல்பட்ரோஸ் குடும்பத்தைச் சேர்ந்த பறவையினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கடல்சார் பறவைகள் பற்றி ஆய்வு நடத்தும் பேராசிரியர் ஜோன் க்ரொக்ஷால் கூறியதாவது:- அல்பாட்ரோஸ் குடும்பத்தைச் சேர்ந்த 22 பறவையினங்களில் 17 இனங்கள் அழிந்துவிடும் நிலையில் உள்ளது. வர்த்தக ரீதியான நவீன மீன்பிடி முறைகளாலும், பெருச்சாளிகள், காட்டுப் பூனைகள் போன்ற உயிரினங்களால் இப்பறவைகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளுமே இந்த அழிவுக்கு காரணம் . கடல் மற்றும் கடல்சார்ந்த பகுதிகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும், அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை எச்சரிப்பதற்கும் இந்த கடல்சார் பறவைகள் மிகவும் அவசியமானவை. இவ்வாறு அவர் கூறினார்

Monday, May 14, 2012

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் முத்தான மூலிகைகள்

இன்றைக்கு கூந்தல் வளர்ச்சிக்கும், கூந்தலுக்கு நறுமணம் ஊட்டவும் எண்ணற்ற ஷாம்பு, கிரீம் என விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றின் வருகைக்கு முன்னரே பண்டைய காலத்தில் பூந்திக்கொட்டை, கரிசலாங்கண்ணி, மருதாணி என எண்ணற்ற மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஷாம்பு, சோப்பு போன்றவைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு முடி கொட்டுவதை தவிர்க்கவும், கூந்தலின் வளர்ச்சிக்கும் இன்றைக்கும் அந்த மூலிகைகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பூந்திக்கொட்டை

நாம் பயன்படுத்தும் குளியல்பொடி மற்றும் கேசப்பொடிகளில் இயற்கையின் கலவை அதிகமாக இருந்தால் தான் நமது தோலும், கேசமும் ஆரோக்கியமாக இருக்கும். கேசத்திற்கு பளபளப்பையும், தோலுக்கு வழுவழுப்பையும் தந்து நுரை பொங்க குளித்த திருப்தியை தரும் மூலிகை தான் பூந்திக்கொட்டை.

சபின்தஸ் எமார்ஜினேட்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சப்பின்டேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த மரத்தின் உலர்ந்த பழங்கள் பூந்திக்கொட்டை என்றும் பூவந்திக்கொட்டை என்றும், சோப்புக்காய் என்றும் அழைக்கப்படுகின்றன. இதன் பழத்தோலில் உள்ள சப்போனின்கள், சப்பின்டோசைடுகள், ஹெடராஜெனின்கள் மற்றும் டெர்பினாய்டுகள் பூஞ்சை கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, தோலுக்கு பிரகாசத்தையும் மென்மையும் கொடுக்கின்றன.

வீட்டில் ஏற்கனவே வேறு குளியல் பொடி உபயோகப்படுத்துபவர்கள் பத்தில் ஒரு பங்கு பூந்திக்கொட்டை பொடியை கலந்துகொள்ளலாம். பூந்திக்கொட்டையை லேசாக வறுத்து, மேற்தோலை உரித்து, இடித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது சோறு வடித்த கஞ்சி அல்லது சீயக்காய் தூளுடன் கலந்து தலையில் தேய்த்து, அலசி, குளித்து வரலாம்.

உசிலை இலை, இலுப்பை பிண்ணாக்கு, ரோஜாப்பூ, செம்பரத்தை பூ, செம்பரத்தை இலைகள், சிகைக்காய், வெட்டிவேர், விளாமிச்சம் வேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, நுண்ணியதாக அரைத்து, துணியில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை நீரில் கரைத்து சற்று நேரம் வைத்திருந்து பின் தலை மற்றும் உடலில் தேய்த்து குளித்துவர நுரை உண்டாகி, அழுக்கு நீங்கி, தோலும், கேசமும் சுத்தமடையும்.

கரிசலாங்கண்ணி

கூந்தல் வளர்ச்சிக்கு கரிசலாங்கண்ணி சிறந்த மூலிகையாகும். இந்த மூலிகைத் தைலம் கேச வளர்ச்சிக்கு உதவுவதோடு கூந்தல் உதிர்தலை தடுக்கும். முடிகளின் வேர்கால்களில் இந்த கூந்தல் தைலத்தை வைத்து மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் வலுவடையும். உடல் குளிர்ச்சியடையும்.

வெந்தயம்

கூந்தலினை பட்டுப்போன்ற மென்மையாக்குவதில் வெந்தயம் சிறந்த மூலிகையாகும். வெந்தயத்தை இரவு நேரத்தில் ஊறவைத்து காலையில் அதனை மைய அரைத்து தலையில் ஊறவைத்து குளிக்கலாம். இதனால் தலைக்கு குளிர்ச்சி ஏற்படும். கூந்தல் பட்டுப்போல மாறும்.

மருதாணி

கூந்தலை கருமையாக்குவதில் மருதாணி சிறந்த மூலிகை. இது இளநரையை தடுக்கும். கூந்தலில் பொடுகு ஏற்படாமல் தடுக்கும். கூந்தலின் வேர்கால்களை வலுவாக்கி உதிர்வதை தடுக்கும்.

சோற்றுக் கற்றாழை

சோற்றுக்கற்றாழை சிறந்த மூலிகையாகும். கூந்தல், சருமம் போன்றவற்றினை பாதுகாக்க சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. சோற்றுக் கற்றாழையின் உள்ளிருக்கும் சோற்றை எடுத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்ந்து வழுக்கையானவர்களுக்கு புதிய முடி முளைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கூந்தலின் வறட்சியை போக்கி மென்மையாக்குவதில் சோற்றுக்கற்றாலை முக்கிய பங்காற்றுகிறது.

கடுக்காய், நெல்லிப் பொடி

முடி உதிராமல் இருக்க அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்.இதேபோல் ஜடமான்சி, குஷ்டா, கறுப்புஎள், நன்னாரி, நீல வண்ண அல்லி. செம்பருத்தி, பிருங்கராஜ் கரிசிலாங்கண்ணி), நீர்பிரம்மி, அதிமதுரம், குந்துமணி, குடூச்சி, இவைகளின் களிம்பை தலையில் தடவி வந்தால் முடி செழித்து, கருமையாக வளரும். கடுக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி, இவற்றை பாலில் ஊற வைத்துக் குளித்தால், முடி உதிர்வது நிச்சயமாக நிற்கும

Thursday, May 3, 2012

கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட!

சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகு என்ற கருத்து இன்றைய இளம் தலைமுறையினர்ஆழ்மனதில் பதிந்து போய் விடுகிறது. கொஞ்சம் கறுப்பாக இருந்தாலும் முகத்தை சிவப்பாக்க சந்தைகளில் விற்கும் எண்ணற்ற அழகுசாதன கிரீம்களை வாங்கி முகத்தில் பூசி வெள்ளையடித்துக் கொள்கின்றனர். அதெல்லாம் பணத்திற்கு வேட்டு வைக்கும் சமாச்சாரம். கறுப்பானவர்கள் இனி கவலைப்பட வேண்டாம் என்பது அழகுக்கலை நிபுணர்கள் களின் நம்பிக்கை வார்த்தையாகும்.

கறுப்பாக பிறந்து விட்டோமே என்ற தாழ்வு மனப்பான்மை இருந்தால் அதனை இன்றே மறந்துவிடுங்கள் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள் ஏனெனில் கறுப்பே சிறந்த அழகு! என்கின்றனர் அவர்கள். இனி கறுப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள். அதுதான் உண்மை.

புற்றுநோய் தாக்காது

கறுப்பானவர்களின் தேகத்தில் நிறத்தை அளிக்கும் மெலனின் மிகப்பெரிய நன்மை அளிக்கிறது. இவர்களுக்கு வெயிலில் உள்ள அல்ட்ரா வயலட் கதிர்கள் எளிதில் தாக்காது. மேலும் தோல் புற்றுநோய் தாக்குவதும் குறைவு என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பொதுவாக கறுப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பரு வருவதில்லை. சிவப்பாக இருப்பவர்கள் பலரும், முகம் முழுவதும் முகப்பரு வந்து அவதிப்படுவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.சிவந்தவர்களின் முகத்தில் சிறு மருவோ, கட்டியோ எது வந்தாலும் அப்பட்டமாக வெளியே தெரியும். ஆனால் கறுப்பானவர்களுக்கு அந்த பிரச்சினை இருப்பதில்லை.

கறுப்பானாலும் களை

சிவந்த நிறம் மட்டுமே அழகாகிவிடமுடியாது முகமும் களையாக இருப்பது அவசியம். அப்படி முகமும்,உடல் அமைப்பும் களையாக-வசீகரமாக இருந்தால் தான் ஒரிஜினல் அழகு. கறுப்பாக இருந்தாலும்'களை'யாக இருப்பவர்கள் பலர் உண்டு அந்தவகையில், அலங்காரங்களும், நகைகளும் களையான கறுப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பாலிவுட் நடிகைகள் பிபாஷா பாசு, நந்திதா தாஸ், போன்ற நடிகைகள் கறுப்பாக இருந்தாலும் களையான முக அமைப்பால் அழகியாக உயர்ந்தவர்கள். அதேபோல் ஆண்களிலும் கறுப்பு சூப்பர் ஸ்டார்கள்தான் அதிகம் உள்ளனர்.

வெளிர் நிற ஆடைகள்

கறுப்பாக இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய, உடல்வாகுக்கு பொருந்தும் ஆடைகளையும், அலங்காரத்தையும் செய்து கொண்டால் அவர்களை விட அழகானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

வெளிர் நிறத்திலான ஆடைகள், எளிய அலங்காரம் போன்றவை கறுப்பானவர்களை மேலும் அழகாகக் காட்டும். வெள்ளைக்கல் பதித்த நகைகள், தங்க நகைகள் போன்றவை சிவப்பானவர்களை விட,கறுப்பானவர்களுக்குத்தான் எடுப்பாகத் தோன்றும்.

சந்தனமும், தயிரும்

முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டுமானால் பல சிகிச்சைகள் உள்ளன. திடீரென சிவப்பாக்க எந்த முறையும் இல்லை. எனவே, உடனடியாக சிவப்பாக்க வேண்டும் என்று எந்த அழகுக் கலை நிபுணரையும் நிர்ப்பந்திக்க வேண்டாம். வீட்டிலேயே அதற்கான வழிமுறைகள் உள்ளன.

வாரத்தில் ஒரு நாளாவது சருமத்திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சை சாறு போன்ற எதையாவது ஒன்றை தடவி ஊற விட்டு கழுவி வந்தால் இயற்கையான முறையில் - அதேசமயம் எளிய முறையில் உங்கள் அழகைப் பேணலாம். அத்துடன், புன்சிரிப்பும், அழகை அதிகரித்துக் காட்டும் ஆபரணமாகும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

லைட் மேக் அப்

கறுப்பான தேகம் கொண்டவர்கள் மேக் அப் செய்யும் போது கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் பவுன்டேசன் தேர்ந்தெடுப்பது முக்கியமானது. ஸ்கின் டோனிற்கு ஏற்ப பவுண்டேசன் போட்டுவிட்டு அதற்குப் பின் லைட்டாக பவுடர் போடலாம். மேலும் மஸ்காரா, ஐ லைனர் ஆகியவற்றை சற்று திக்காக உபயோகிக்கலாம். மேலும் உதட்டிற்கு லிப் கிளாஸ் போடுவது கறுப்பு சருமத்திற்கு ஏற்றது. அப்புறம் பாருங்கள் ஜொலி ஜொலிக்கும் அழகு முகம் உங்களுடையதாகும்!